நமது இடத்திலே கிடைக்கும் இயற்கையின் வரம் தந்த " கோவக்காய் " பயன்படுத்தி " சர்க்கரை என்னும் "குறைபாட்டை" சரிசெய்வோம்.
கோவக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உங்களுடன் சிறிய பகிர்வு .....
அன்பு உறவுகளுக்கு ,
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!!
கோவக்காய் என்பது பூசணிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வெப்பமண்டல தாவரமாகும்.
கோவக்காயில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது நல்ல கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ நிறைந்தது.
மற்றும் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவும் வைட்டமின் சி இதில் உள்ளது.
உடல்சோர்வு:
கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.
சர்க்கரை வியாதி :
ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது
மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவை உண்பதாலும் , கடைகளில் சாப்பிடுவதாலும் உண்டாகும் கெட்ட கழிவுகளை கோவக்காய் வெளியேற்றுகிறது.
புற்று நோய்:
புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதி மற்றும் மிகுந்த வேதனையை தரக்கூடிய ஒரு நோயாகும். கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதயம்:
ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்து:
இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கோவக்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.
கல்லீரல்:
சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...
+91 7708780600
oilmillchinnaianadar@gmail.com
"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 9788058987

No comments:
Post a Comment