அன்பு உறவுகளுக்கு ,
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!!
நமது பாரம்பரிய உணவு முறையான " கருப்பு உளுந்தில் உருண்டை" செய்வது எப்படி என்று பார்ப்போம் .
இந்த கருப்பு உளுந்து உருண்டை செயல் முறை " எங்க அப்பாயீ கிச்சன் "
அவர்களால் பதிவு செய்யப்படுகிறது. தேவை இருப்பின் தொடர்பு கொள்ளவும் +91 80981 33081
பயன்கள் :
1. எலும்புகளின் வளர்ச்சிக்கு (உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன)
2. நரம்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கு
3. புரதச்சத்து, நார்ச்சத்து , போலட்டுகள் குழந்தைக்கும் , கர்பிணிக்கும் அவசியம்
4. உளுந்தில் உள்ள இரும்புச்சத்தானது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நாள்முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்கின்றன.
5.இரும்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது.
தேவையான பொருட்கள்:
* முழு உளுந்து 500 கிராம்
* பொட்டு கடலை 100 கிராம்
*நிலக்கடலை 100
*அரிசி 50 கிராம்
* வெள்ளம் 250 கிராம்
* சுக்கு - சிறிய துண்டு
* ஏலக்காய் - 5 கிராம்
* நெய் 200 கிராம்
செயல்முறை :
> முழு உளுந்து, கடலை, அரிசி , நிலக்கடலை, பொட்டுக்கடலை இவை னைத்தையும் தனித்தனியாக மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
> இந்த வறுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து இத்துடன் சுக்கு, ஏலம் சேர்த்து ஒருமுறை அரைத்து கைகளால் கிளறிவிட்டு, ஒன்றாக பிசைந்துவைக்கவும்.
> வெல்லத்தை நன்றாக உடைத்து அனைத்து பொருட்களுடனும் சேர்த்து அரைத்து கிளறிவிட்டுக்கொள்ளவும்.
> நெய்யை சூடாக்கி தயார் செய்த அந்த மாவில் ஊற்றி கிளறி , சிறு சிறு உருண்டையாக பிடித்து வைத்து சாப்பிட்டவும்.
> இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் பயன்படுத்தவும்.
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...
+91 7708780600
oilmillchinnaianadar@gmail.com
"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 9788058987

Tq so much
ReplyDeleteIt is very good for health also
ReplyDelete