அன்பு உறவுகளுக்கு ,
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!!
நம்ம முன்னோர்கள் " உடம்பிற்க்கு வலிமை தரும் அன்றாடம் நாம் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டு சமைத்து உண்டார்கள் " ஆனால் நாம் காலப்போக்கில் மறந்தே போனோம் விளைவு - இயறக்கை சத்துக்களை இழந்து , மருத்துவரை நாடுகிறோம்.
உளுந்தனது 2 வகையாக உள்ளது. 1. வெள்ளை உளுந்து 2. கருப்பு உளுந்து.
👍 நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும்
👍உடல் குளிச்சிக்கும்,
👍நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும்
👍பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும்
👍பெண்களின் இடுப்பு வலிமை பெறவும்
👍 பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது
👍மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும் இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவை குறைச்சுஇதயத்தபலப்படுத்துகிறது
👍இளைத்த உடலை பலப்படுத்த உதவுகிறது
👍உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகின்றது .
👍 நல்ல செரிமானத்திற்கு
உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் லிப்பிடுகளின் அளவுகளை கட்டுக்குள் வைக்கிறது.
👍 இதய நலத்திற்கு
உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.
பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை தடை ஏதும் இல்லாமல் சீராக நடைபெற உதவுகிறது.
👍 ஆற்றலைப் பெற
உளுந்தில் உள்ள இரும்புச்சத்தானது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நாள்முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்கின்றன.
இரும்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது.
👍 நரம்பு சம்பந்தான குறைபாடுகளுக்கு
மனச்சோர்வு, நரம்பு பலவீனம், நினைவாற்றல் குறைவு, ஸ்கிசோஃப்ரினா உள்ளிட்ட நரம்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தானது முழுமையாக குணப்படுத்த இயலாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது.
வலி மற்றும் அழற்சியைக் குணப்படுத்த
உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் விட்டமின்கள் உடலில் சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெற உதவுவதோடு உடலில் வலி உள்ள பகுதியைச் சரிசெய்கின்றன.
👍 எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ளது.
உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
👍 சரும ஆரோக்கியத்திற்கு
உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும அழற்சி, பரு உள்ளிட்ட சருமக் காயங்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வினைத் தருகின்றன.
👍 கேச பராமரிப்பிற்கு
உலர்ந்த பொலிவிழந்த கேசத்தில் உளுந்தினைப் பயன்படுத்தும்போது அது கேசத்திற்கு பொலிவையும், வலிமையையும் கொடுக்கின்றன.இதற்கு காரணம் உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகும்.
மேலும் பாசி பயறுடன் உளுந்தினை சேர்த்து உபயோகித்தால் பொடுகு தொந்தரவு நீங்குவதுடன் கேசம் பளபளக்கும்.
4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
👍 கர்ப்பிணிகளுக்கு
இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
👀 உளுந்தினைப் பற்றிய எச்சரிக்கை
உளுந்தானது உடலில் யூரிக் அமிலத்தின் அளவினை அதிகரிக்கச் செய்யும். எனவே கீல்வாதம், சிறுநீரகக்கற்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்கள் உளுந்தினைத் தவிர்ப்பது நலம்.
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...
"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 7708780600
+91 9788058987
email : oilmillchinnaianadar@gmail.com
👍அருமையான பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete👍👍👌👌👌
ReplyDelete