இளநீர் குடிக்கலாமா அல்லது குடிக்க கூடாத ??
ஒரு நாளைக்கு எத்தனை குடிக்கலாம் ???
இளநீரை சர்க்கரை உள்ளவர்கள் குடிக்கலாமா ????
இள நீரை பற்றிய சிறிய பகிர்வுகள் உங்களுடன்....
வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடியது இயற்கை வழங்கும் நீர் தான் இளநீர் .
வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ், நீர் மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் உதவுகிறது.
உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மினரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன.
இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அது சருமத்தை பளபளக்கச் செய்யும்.
இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் என்னும் வதந்தியும் பரப்பப்படுகிறது.
கண்டிப்பாக சர்க்கரை இருக்கிறது ஆனால் மிக குறைவான அளவே.
சர்க்கரை உள்ளவர்கள்இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து உண்ணும்போது இரத்தத்தில் உள்ள குளுகோஸைக் கட்டுப்படுத்துகிறது.
>> இன்று பலருக்கும் இதயப் பிரச்னை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.
>> இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும்.
>> சிறுநீரகக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும் .
>>குறிப்பாக பெண்களுக்குதான் சிறுநீரகப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. அவர்கள் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது.
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத காலை மற்றும் மாலையில் அருந்துவதைத் தவிர்க்கலாம்.
# கர்பிணிகள் இளநீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி அருந்தலாம்
# சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இளநீர் அருந்தக் கூடாது.
# கால் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும் பிரச்னை கொண்டோர், நட்ஸ் அலர்ஜி , இதயப் பிரச்னை உள்ளவர்கள், இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும்.
அதிகபட்சமாக 300 மி.லி இளநீர் அருந்தலாம்.
அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் .
Thank you It is very useful to me
ReplyDeleteWelcome & thanks for your comment.
DeleteWelcome & thanks for your comment.
Delete