விளக்கெண்ணையின் அவசியங்கள் !! (தொடர்ச்சி)
அன்பு உறவுகளுக்கு ,
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!!
மூட்டுவலிக்கு முக்கியமானது:
எண்ணெய் குளியல் இல் லாத இக்காலத்தில் மூட்டுகளில் இயல்பாக வலி உண்டாகிறது.
இரவு படுக்கும் முன்பு சில துளி விளக்கெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் போன்று தேய்த்து வந்தால் சரும துவாரங்களின் வழியாக எண்ணெய் உட்புகுந்து மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதோடு வலியை யும் குறைக்கிறது.
ஆஸ்டியோ ஆரித்ரிடிஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந் தால் அதை விளக்கெண்ணெய் குணப்படுத்துகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
கூந்தல் வளர்ச்சியிலும் விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெயிலிருந்து வெளிவரும் வாடை பேன்களுக்கு ஒவ்வாமையைத் தருவதால் பேன்கள் நிரந்தரமாக ஒழியும்.
அடர்த்தி நிறைந்த விளக்கெண்ணெய் கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
இளநரை, வறண்ட கூந்தல் பிரச் னைகளையும் சரிசெய்கிறது.
வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் இரண்டு டீஸ்பூன் சுத்தமான எண்ணெயுடன் பாசிப்பருப்பு மாவு / குளியல் பொடி / மஞ்சள் தூள் ஏதேனும் ஒன்றை சேர்த்து முகத்தில் மசாஜ் போல் செய்ய வேண்டும். (முகத்துக்கு எந்த பேக் போடுவ தாக இருந்தாலும் கீழிருந்து மேல் நோக்கியவாறு மசாஜ் இருக்க வேண்டும். அப்போதுதான் சருமங்களில் சுருக்கங்கள் விழாது) அரை மணி நேரம் கழித்து முகத்தை மிதமான வெந்நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். சருமமும் வெண்மையாக இருக்கும்.
இரவு படுக்க செல்வதற்கு முன்பு விளக்கெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி நன்றாக குழைத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் போல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண்கள் புத்துணர்வோடு இருக்கும். கருவளையம் இருந்த இடம் தெரியாது.
விளக்கெண்ணெய் வியக்க வைக்கும் நல்குணங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இனியேனும் உணரு வோமா?
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...
"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 7708780600
+91 9788058987
email : oilmillchinnaianadar@gmail.com
No comments:
Post a Comment