Tuesday, August 4, 2020

விளக்கெண்ணையின் அவசியங்கள் !!

அன்பு உறவுகளுக்கு , 

டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!! 

நமது முன்னோர்கள் பயன்படுத்திய வகைகள் நல்லெண் ணெய்,  கடலை எண்ணெய், ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் விளக் கெண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான். 

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் " உணவு முறையே "

நவீன காலத்தில் நாம் நமது பாரம்பரிய  உணவு வகைகளை இழந்தோம் , நமது ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம்.

விளக்கெண்ணெய்:

சத்துக்கள் நிறைந்த மருத்துவ குணமுள்ள எண்ணெய்தான் ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.

மூன்றுவிதமான விளக்கெண்ணெய் கடைகளில் கிடைக்கிறது. 
 
1) ஆமணக்கு செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இது ஆர்கானிக் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் வேதிப்பொருள்களை நீக்கி பயன்படுத்தி னால் மேலும் நன்மைகள் உண்டாகும். 

இந்த எண்ணெய் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

2) கருப்பு ஆமணக்கு எண்ணெய் என்பது விதைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் எடுக்காமல் வறுத்து அதன் பிறகு எண் ணெய் எடுப்பது. 

இது பார்க்க கறுப்பாக புகை வாசனையோடு இருந்தாலும் சருமத்தை அழகாக வைத்திருக்கவும் முகப் பருக்கள், வடுக்களை நீக்கவும் உதவுகிறது.

3)ஹைட்ரஜன் சேர்த்து உருவாக்கப்படும் இந்த விளக்கெண்ணெய் ஹைட்ரோஜெனரேட்டட் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
 இது நீரில் கரையாது என்பதோடு அதிக கடினத்தன்மையும் கொண்டிருக்கும். இவற்றை அழகு சாதன பொருள்களில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

சிறந்த மலமிளக்கி:

 பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்க லுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள்.

சிறு வயது குழந்தைகளாக இருந்தாலும் காலையில் வெறும் வயிற்றில் கால் தம்ளர் மிதமான வெந்நீரில் 5 முதல் 10 சொட்டு கள் வரை (வயதுக் கேற்ப) விட்டு கலந்து குடிக்க வைத்தால் அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்.

முன்னோர்கள் இரவு நேரம் வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் தோய்த்து சாப்பிட்டார்கள். 

விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சித்தரக்கூடியது என்பதால் அடிக்கடி எடுக்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பருவ காலத்துக் கேற்ப ஆறுமாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது ஆரோக்யம் காப்பதோடு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

குழந்தைகளுக்கு சூட் டினால் உண்டாகும் வயிற்றுவலியைத் தணிப்பதிலும் விளக்கெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தையின் தொப்புள், உள்ளங்கால் பகுதியில் இலேசாக ஒரு சொட்டு தடவினால் உஷ்ணம் குறைந்து மலக்கட்டு இருந் தாலும் வெளியேறும். 

தொடர்ந்து மலரும்...

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.


வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...

"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் "  பயன்படுத்தி 
ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ்வோம்.

டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.

+91 7708780600 
+91 9788058987 

email :  oilmillchinnaianadar@gmail.com

No comments:

Post a Comment

வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் வரும் நன்மை...

  FRIDAY, OCTOBER 2, 2020 வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் பயன்படுத்துவதால் வரும் நன்மை, தீமைகள் (படித்ததிலிருந்து சிறு பகிர்வு)   அன்பு உற...